செஞ்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை சாதியை சொல்லி இழிவுபடுத்தியதாக புகார்: 4 பேர் மீது வழக்குப் பதிவு

செஞ்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை சாதியை சொல்லி இழிவுபடுத்தியதாக புகார்: 4 பேர் மீது வழக்குப் பதிவு

Uncategorized

விழுப்புரம்: செஞ்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை சாதியை சொல்லி இழிவுபடுத்தியதாக துணைத் தலைவர் உட்பட 4 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செஞ்சி அருகே ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவராக ஏழுமலை மனைவி சங்கீதா உள்ளார். இவர் கடந்த 2-ம் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் எதிரே அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் விசாரித்தனர். அப்போது, பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த தன்னை ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் உட்பட 4 பேர் சாதியை சொல்லி வன்கொடுமை செய்வதாக கூறி செப்டம்பர் 1-ம் தேதி செஞ்சி போலீஸில் புகார் அளித்திருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

….

Source: Hindu

Read More >> செஞ்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை சாதியை சொல்லி இழிவுபடுத்தியதாக புகார்: 4 பேர் மீது வழக்குப் பதிவு

Search

Back to Top