விருதுநகர் ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு: பணம் கேட்பதால் அதிகாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி
Uncategorized October 3, 2024,
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலி முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பணம் கேட்கப்படுவதால் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலன் பொறுப்பு வகித்து வருகிறார். மாவட்டத்தில் நடைபெறும் அன்றாட அரசு நிகழ்வுகள், அறிவிப்புகள், புத்தகத் திருவிழா குறித்த பதிவுகள் என பல்வேறு தகவல்கள் மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. இவரது பக்கத்தை சுமார் 3,800-க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், ஆட்சியர் புகைப்படத்துன் கூடிய போலியான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பணம் கேட்கப் படுவதால் மாவட்ட ஆட்சியரின் முகநூலை பின் தொடரும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
….
Source: Hindu
Read More >> விருதுநகர் ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு: பணம் கேட்பதால் அதிகாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி