அம்பத்தூர் அருகே அரை டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

அம்பத்தூர் அருகே அரை டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

Uncategorized

ஆவடி: அம்பத்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இன்று (செப்.29) போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் அணுகு சாலையை ஒட்டிவுள்ள மைதானத்தில் உள்ள முட்புதரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அம்பத்தூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில், மைதானத்தில் உள்ள முள்புதரில் அரை டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஆகவே, அந்த புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

….

Source: Hindu

Read More >> அம்பத்தூர் அருகே அரை டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

Search

Back to Top