சென்னையில் கன்டெய்னருடன் ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு: தலைமறைவான அரசு பேருந்து ஓட்டுநர் கைது
Uncategorized September 28, 2024,
சென்னை: ரூ.35 கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் அடங்கிய கன்டெய்னர் திருடப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் மேலாளரான குரோம்பேட்டை, சரஸ்வதிபுரத்தைச் சேர்ந்த பொன் இசக்கியப்பன் (46) என்பவர் துறைமுகம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், 'கடந்த 7ம் தேதி வெளிநாட்டிலிருந்து சுமார் ரூ.35 கோடி மதிப்புள்ள 5,230 டெல் நோட்புக் கம்ப்யூட்டர்கள் (Tab) அடங்கிய கன்டெய்னரை சென்னை துறைமுகத்தில் உள்ள யார்டில் இறக்கி வைத்தோம். மீண்டும் 11ம் தேதி அந்த கன்டெய்னரை எடுப்பதற்காக துறைமுகத்திற்கு வந்து பார்த்தபோது, அதை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதில், தொடர்புடையவர்களை கைது செய்து அதில், இருந்த பொருட்களை மீட்டுத் தர வேண்டும்' என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
….
Source: Hindu
Read More >> சென்னையில் கன்டெய்னருடன் ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு: தலைமறைவான அரசு பேருந்து ஓட்டுநர் கைது