திராவிட சகோதர சகோதரிகளுக்கு ஓணம் வாழ்த்துக்கள்: முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் ட்விட்..!
Uncategorized September 15, 2024,

கேரள மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மலையாளத்தில் ஓணம் வாழ்த்துக்கள் கூறிய செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
“உலகெங்கிலும் உள்ள எனது மலையாள சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துக்கள்! பெரும் இயற்கைப் பேரிடரின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம் நம்பிக்கையையும் வலிமையையும் தரட்டும். இந்த ஓணம் மலையாளிகளின் ஒற்றுமையை அவர்கள் வாழ்வில் பிரதிபலிக்கட்டும்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்களும் பல அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva
ലോകമെമ്പാടുമുള്ള എൻ്റെ മലയാളി സഹോദരങ്ങൾക്ക് ഹൃദയം നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!
വലിയൊരു പ്രകൃതി ദുരന്തത്തിന്റെ ആഘാതത്തിൽ നിന്ന് കരകയറുന്ന കേരളത്തിലെ എൻ്റെ ദ്രാവിഡ സഹോദരങ്ങൾക്ക് ഈ ഉത്സവകാലം പ്രത്യാശയും ശക്തിയും നൽകട്ടെ.
ഈ ഓണക്കാലം മലയാളികളുടെ ഒത്തൊരുമയുടെയും അതിജീവനത്തിന്റെയും… pic.twitter.com/52ppKMnETW
— M.K.Stalin (@mkstalin) September 15, 2024
….
Source: Webduniya
Read More >> திராவிட சகோதர சகோதரிகளுக்கு ஓணம் வாழ்த்துக்கள்: முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் ட்விட்..!