கொள்ளிடம் ஆற்றில் 5 இளைஞர்கள் மூழ்கினர்: 3 பேர் உடல்கள் மீட்பு; சகோதரர்களை தேடும் பணி தீவிரம்
Uncategorized September 9, 2024,
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயம் அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 இளைஞர்கள் நீரில் மூழ்கினர். இதில் 3 பேரில் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், சகோதரர்கள் இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை சேத்துப்பட்டு நேருபூங்கா ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பிராங்கிளின்(23), ஆண்டோ(20), அவரது நண்பர்கள் கிஷோர் (எ)தமிழரசன்(20), சூளையைச் சேர்ந்தகலைவேந்தன்(20), ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த மனோகர்(19) ஆகியோர் உணவுவிநியோக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் உட்பட 18 பேர் வேனில்வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். நேற்று காலை தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்துக்குப் புறப்பட்டனர். பேராலயம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள மகிமைபுரத்தில் சமையல் செய்துள்ளனர். அப்போது, பிராங்கிளின், ஆண்டோ, கிஷோர், கலைவேந்தன், மனோகர் ஆகியோர் ஆற்றில் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர்.
….
Source: Hindu
Read More >> கொள்ளிடம் ஆற்றில் 5 இளைஞர்கள் மூழ்கினர்: 3 பேர் உடல்கள் மீட்பு; சகோதரர்களை தேடும் பணி தீவிரம்