ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பெங்களூருவில் கைதான ரவுடி மாட்டு ராஜாவிடம் போலீஸார் விசாரணை
Uncategorized August 31, 2024,
சென்னை: பட்டினப்பாக்கத்தில் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி மாட்டு ராஜாவை பெங்களூருவில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாகவும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற மாட்டு ராஜா(42). இவர் மீது கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் கேட்டு மிரட்டிய வழக்கில் போலீஸார் இவரை தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் தனிப்படை போலீஸார் இன்று மாட்டு ராஜாவை கைது செய்தனர். இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிக்குண்டு சப்ளை செய்ததாக போலீஸாரால் தேடப்பட்டு வரும் ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய நண்பர் ஆவர்.
….
Source: Hindu
Read More >> ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பெங்களூருவில் கைதான ரவுடி மாட்டு ராஜாவிடம் போலீஸார் விசாரணை