சென்னையில் சிம் கார்டுகளை சட்ட விரோதமாக பயன்படுத்திய கால் சென்ட்டரில் உபகரணங்கள் பறிமுதல்
Uncategorized August 22, 2024,
சென்னை: சென்னையில் சிம்கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்திய கால் சென்ட்டரை மத்திய உளவுப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். தலைமறைவாக உள்ள அதன் நிர்வாகிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 5 ஆண்டுகளாக தனியார் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 800 பேர் பணியாற்றுகின்றனர். முன்னணி தனியார் வங்கிகளில் கிரெடிட் கார்டு, தனி நபர் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை இந்த நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு கடன்களை திருப்பி செலுத்தும்படி அறிவுறுத்துவார்கள். இந்நிலையில், இந்நிறுவனத்தினர் மத்திய அரசின் விதி முறைகளை மீறி செல்போன் சிம் கார்டுகளை, சிம்டூல் பாக்ஸில் பயன்படுத்தி, சட்ட விரோதமாக அதிக லாபம் பெறும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படுவதாக புகார் எழுந்தது.
….
Source: Hindu
Read More >> சென்னையில் சிம் கார்டுகளை சட்ட விரோதமாக பயன்படுத்திய கால் சென்ட்டரில் உபகரணங்கள் பறிமுதல்