மதுரையில் ஆம்னி பஸ் ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம்: போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?
Uncategorized July 25, 2024,
மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காரைக்குடியைச் சேர்ந்த ஒருவர் ஓட்டுநராக பணிபுரிந்தார். அவர், முன்பதிவு செய்யப்படாத இருக்கைகளில் பயணிகளை ஏற்றி முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு அவர் பணிக்கு வந்தார். அப்போது டிராவல்ஸ் ஊழியர்கள் அவரை அலுவலக ஜன்னல் கம்பியில் கைகளைக் கட்டி வைத்து தாக்கி, முறைகேடு குறித்து விசாரித்தனர். பின்னர் அவரை வேலையை விட்டு நீக்கி எச்சரித்து அனுப்பினர். இக்காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக மாட்டுத்தாவணி போலீஸார் விசாரிக்கின்றனர்.
….
Source: Hindu
Read More >> மதுரையில் ஆம்னி பஸ் ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம்: போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?