ஜாமரை மீறி புதுச்சேரி சிறைக்குள் செல்போனில் பேசும் கைதிகள்: ஐஜி நடவடிக்கை

ஜாமரை மீறி புதுச்சேரி சிறைக்குள் செல்போனில் பேசும் கைதிகள்: ஐஜி நடவடிக்கை

Uncategorized

புதுச்சேரி: சிறையில் கைதிகளுக்கு செல்போன் சிக்னல் கிடைக்கும் வகையில் அலைவரிசையை கூடுதலாக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி சிறைத் துறை ஜஜி எச்சரித்துள்ளார். புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் செல்போன்களைப் பயன்படுத்தாத வகையில் செல்போன் சிக்னலை சிறைக்குள் தடை செய்யும் வகையில் சிறப்புக் குழுவினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை, தண்டனைக் கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸார் நடத்திய சோதனையில் 2 கைதிகளிடம் செல்போன் இருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே சிறை வளாகத்தில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ஜாமர் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் செல்போன் சிக்னல் கிடைக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சிறை பாதுகாப்பை மீறி கைதிகள் செல்போனை பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

….

Source: Hindu

Read More >> ஜாமரை மீறி புதுச்சேரி சிறைக்குள் செல்போனில் பேசும் கைதிகள்: ஐஜி நடவடிக்கை

Search

Back to Top