உடுமலை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: போக்சோ வழக்கில் 3 சிறார்கள் உட்பட 9 பேர் கைது
Uncategorized May 13, 2024,
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மூன்று சிறார்கள் உட்பட 9 பேரை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், அவரிடம் விசாரித்த போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் தன்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
….
Source: Hindu
Read More >> உடுமலை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: போக்சோ வழக்கில் 3 சிறார்கள் உட்பட 9 பேர் கைது