தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம் இதோ..!
Uncategorized May 8, 2024,

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 6,630என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 53,040 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,100 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,800 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 88.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 88,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
….
Source: Webduniya
Read More >> தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம் இதோ..!