தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!  மே 7-ல்  ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! மே 7-ல் ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!!

Uncategorized

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மே 6ஆம் தேதி வரை தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 

 

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:

 

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பாலக்கோடு (தர்மபுரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), பாரூர் (கிருஷ்ணகிரி), மேலாலத்தூர் (வேலூர்), பையூர் AWS (கிருஷ்ணகிரி), பாலக்கோடு ARG (தர்மபுரி) தலா   1. 


அதிகபட்ச வெப்பநிலை: 

 

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது.  

 

அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 44.3° செல்சியஸ் (இயல்பை விட +7.5° செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது. தமிழகத்தில்  10  இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 42° – 44°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.

 

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 44.0° செல்சியஸ்,  வேலூரில் 43.6° செல்சியஸ், திருச்சியில் 42.7° செல்சியஸ், தர்மபுரியில் 42.5° செல்சியஸ்,   திருத்தணியில் 42.3° செல்சியஸ்,  சேலம் &  திருப்பத்தூரில்  42.2° செல்சியஸ்,   மதுரை (நகரம்) & நாமக்கல்லில்  42.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில்  4  இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° – 42°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39° – 40° செல்சியஸ்,     பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள்,   புதுவை    மற்றும் காரைக்கால்   பகுதிகளில் 36° – 40° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 25° –30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  

 

அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.0° செல்சியஸ் (+2.9° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.9° செல்சியஸ் (+1.8° செல்சியஸ்)  பதிவாகியுள்ளது.

 

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:

 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 03.05.2024 முதல் 06.05.2024 வரை தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

 

07.05.2024: தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 

08.05.2024 மற்றும் 09.05.2024: தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

 

அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை:

 

03.05.2024 முதல் 07.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள்  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச  வெப்பநிலை  2°  செல்சியஸ் வரை படிப்படியாக  குறையக்கூடும். 

 

03.05.2024 முதல் 07.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.  03.05.2024 & 04.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில்  அதிகபட்ச வெப்பநிலை 3°-5°  செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும். 


03.05.2024 முதல் 07.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–44° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°–40° செல்சியஸ்,  கடலோர தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

 

ஈரப்பதம்:  

 

03.05.2024 முதல் 07.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும். 

 

வெப்ப அலை பற்றி முன்னெச்சரிக்கை: 

 

03.05.2024 & 04.05.2024: வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

 

05.05.2024 & 06.05.2024: வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 

 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ,    ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:

 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

 

03.05.2024 முதல் 06.05.2024 வரை: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது

….

Source: Webduniya

Read More >> தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! மே 7-ல் ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!!

Search

Back to Top