சென்னை | ரயில்களில் பெண் பயணிகளிடம் நகை பறித்த இருவர் கைது
Uncategorized April 29, 2024,
சென்னை: ரயில்களில் பெண் பயணிகளிடம் தங்க நகைகளை பறித்த வழக்கில் தொடர்புடைய இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகருக்கு விரைவு ரயில் கடந்த 21-ம் தேதி இரவு புறப்பட்டது. இந்த ரயிலில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூருக்கு செல்வதற்காக, எண்ணூரை சேர்ந்த லட்சுமி (56) பயணம் செய்தார்.
ரயில் புறப்பட்டு சென்றபோது, கழிவறைக்கு லட்சுமி சென்றார். பின்னர் திரும்பியபோது, கழிவறை அருகே நின்ற அடையாளம் தெரியாத நபர், லட்சுமி கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்துக் கொண்டு, ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | ரயில்களில் பெண் பயணிகளிடம் நகை பறித்த இருவர் கைது