”மதுரை மீண்ட சுந்தரபாண்டியரே” – அமைச்சர் செல்லூர் ராஜூக்கு மதுரையில் போஸ்டர்!
tami nadu July 19, 2020,
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட அமைச்சர் செல்லூர் ராஜூவை வரவேற்கும் விதமாக, மதுரையில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக கொரோனா தடுப்பு முன்கள வீரர்கள் மத்தியிலும், தொற்றனாது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழக அமைச்சர்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜூ ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சைப் பெற்று வந்த செல்லூர் ராஜூ, முழுவதுமாக குணமடைந்து அண்மையில் வீடு திரும்பினார். இந்நிலையில் இதனை வரவேற்கும் விதமாக மதுரையில் அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் “ துன்பம் வரும் எனத்தெரிந்தும் ஊருக்கு உழைத்தவர், அவர் செய்த தர்மம் கொரோனாவிலிருந்து அவரை மீட்டு வீட்டுக்கு அமைத்து விட்டதாகவும், உலகம் உள்ளவரை அந்த தர்மத்தை தொடருவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது”. இந்தப் போஸ்டர்கள் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> ”மதுரை மீண்ட சுந்தரபாண்டியரே” – அமைச்சர் செல்லூர் ராஜூக்கு மதுரையில் போஸ்டர்!