திட்டக்குடி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று !

திட்டக்குடி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று !

tami nadu

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மேலும் செஞ்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு சிசிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார்.

image

இதேபோல அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா உறுதியான நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> திட்டக்குடி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று !

Search

Back to Top