3 ஆண்களுக்கு செல்ஃபி வீடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!!

3 ஆண்களுக்கு செல்ஃபி வீடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!!

tami nadu

நெல்லூரில் 21 வயது இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு 3 ஆண்களுக்கு தான் பேசிய வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நெல்லூர் பக்வத்சல நகரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்னதாக 3 ஆண்களுக்கு தான் பேசிய செல்பி வீடியோ ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவில் சிவா என்னுடன் பேச வேண்டும் என மன்றாடுகிறார். அப்போது தன் கழுத்தைச் சுற்றி துப்பட்டாவையும் அவர் சுற்றி உள்ளார். அறையில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை இளம்பெண்ணின் பெற்றோர் பார்த்த பிறகே இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது.

image

இது குறித்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். விசாரணையில் 3 ஆண்களுக்கும் அந்த இளம்பெண் வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் சிவா என்னுடன் பேச வேண்டுமென கூறியுள்ளார். ஆனால் 3 ஆண்களும் பதில் அளிக்கவில்லை. அதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த இளம்பெண்ணின் பெற்றோர் சிவா என்பவர் மீது புகாரளித்துள்ளனர். வீடியோ அனுப்பப்பட்ட 3 பேரும் தப்பியோடிய நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

image

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – +91 44 2464 0050, +91 44 2464 0060)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> 3 ஆண்களுக்கு செல்ஃபி வீடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!!

Search

Back to Top