கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – போக்சோவில் 3 ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – போக்சோவில் 3 ஆசிரியர்கள் கைது

Uncategorized

பர்கூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசிரியர்கள் 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 13 வயதான 8-ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக மாணவி பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை மாணவியின் வீட்டுக்கு நேற்று மாலை சென்று விசாரித்தார். அப்போது மாணவி அதே பள்ளியின் ஆசிரியர்களான சிவம்பட்டி அருகே உள்ள எம்.பள்ளத்தூரை சேர்ந்த ஆறுமுகம் (48), பாரூர் அருகே உள்ள அனுமன்கோவில் பள்ளம் பகுதியை சேர்ந்த சின்னசாமி (57), வேலம்பட்டி அருகே உள்ள எருமாம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (37), ஆகிய 3 பேரும் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதில் கருத்தரித்து கரு கலைப்பு செய்ததாகவும் தெரிவித்தார்.

….

Source: Hindu

Read More >> கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – போக்சோவில் 3 ஆசிரியர்கள் கைது

Search

Back to Top