தை அமாவாசை.. சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி உண்டா? வனத்துறை அறிவிப்பு..!

தை அமாவாசை.. சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி உண்டா? வனத்துறை அறிவிப்பு..!

Uncategorized

sadhuragiri

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

அந்த வகையில் நாளை தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள்  தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 27ஆம் தேதி முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சுந்தர மகாலிங்கத்தை வழிபடலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் மலையில் இரவில் தங்கக்கூடாது என்றும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராத விதமாக மழை பெய்தால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு அமாவாசைக்கும் சதுரகிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் தை அமாவாசை தினத்தில் கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து கோவில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

….

Source: Webduniya

Read More >> தை அமாவாசை.. சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி உண்டா? வனத்துறை அறிவிப்பு..!

Search

Back to Top