நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!
Uncategorized January 28, 2025,

பங்குச்சந்தை நேற்றைய மிக மோசமான சரிவால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு திருப்தியை அளித்துள்ளது/
இன்று காலை பங்குச்சந்தை ஆரம்பம் முதலில் ஏற்றத்தில் இருந்த நிலையில் சற்று முன் மும்பை பங்குச்சந்தை சன் செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 85 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதே போல் மும்பை தேசிய பங்கு சந்தை நிஃப்டி 173 புள்ளிகள் உயர்ந்து 23,003 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்கு சந்தையில் ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது.
அதேபோல் மாருதி, டிசிஎஸ், ஐடிசி, சிப்லா, விப்ரோ, பிரிட்டானியா, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
Edited by Siva
….
Source: Webduniya
Read More >> நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!