‘சைபர் கிரைம்’ மோசடியாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கித் தரும் நபர்கள் – போலீஸ் எச்சரிக்கை

‘சைபர் கிரைம்’ மோசடியாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கித் தரும் நபர்கள் – போலீஸ் எச்சரிக்கை

Uncategorized

கோவை: கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, சைபர் கிரைம் மோசடியாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கித் தந்து, மோசடிக்கு உடந்தையாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரித்துவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப, சமீபத்திய நாட்களாக சைபர் கிரைம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.

கடந்தாண்டு கோவை மாநகரில், சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பாக 8,254 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 300 எப்.ஐ.ஆர் கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.93.95 கோடி தொகை மர்ம நபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு சிலர் மர்ம நபர்களுக்கு வங்கிக் கணக்குகளை தொடங்கித் தந்து மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுபவர்கள், தங்களது ஏஜென்ட்கள் மூலம், வங்கிக் கணக்குகளைத் தொடங்கித் தர தகுந்த நபர்களை ஆன்லைன் வாயிலாக தேடிப்பிடிக்கின்றனர்.

….

Source: Hindu

Read More >> ‘சைபர் கிரைம்’ மோசடியாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கித் தரும் நபர்கள் – போலீஸ் எச்சரிக்கை

Search

Back to Top