தீபாவளிக்கு பின் 3 கொலைகள்.. சிவகங்கை பகுதி மக்கள் அதிர்ச்சி..!

தீபாவளிக்கு பின் 3 கொலைகள்.. சிவகங்கை பகுதி மக்கள் அதிர்ச்சி..!

Uncategorized

தீபாவளிக்கு பின் மூன்று கொலைகள் நடந்ததை அடுத்து சிவகங்கை பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சிவகங்கை அருகே நாட்டார்குடி என்ற பகுதியைச் சேர்ந்த 70 வயது கணேசன் அதிமுக கிளைச் செயலாளராக இருந்த நிலையில் இவர் இன்று அதிகாலை மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இவரை கொலை செய்த அதே நபர் தான் அதே கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரையும் வெட்டினார் என்றும் ஆனால் அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த மானாமதுரை டிஎஸ்பி சம்பவம் இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தார். சமீபத்தில் நடந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் தான் இந்த கொலை நடந்ததாக முதல் கட்ட விசாரணை தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.

சிவகங்கை பகுதியில் தீபாவளியில் இருந்து இதுவரை மூன்று கொலைகள் தொடர்ச்சியாக நடந்ததால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

….

Source: Webduniya

Read More >> தீபாவளிக்கு பின் 3 கொலைகள்.. சிவகங்கை பகுதி மக்கள் அதிர்ச்சி..!

Search

Back to Top