உ.பி.யில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
Uncategorized October 24, 2024,
மீரட்: உத்தர பிரதேச மாநிலம் புலந்த் சாஹரில் உள்ள சிக்கந்தராபாத் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், 9 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷாபுரி காலனியைச் சேர்ந்தவர் முகமது ரியாசுதீன் (50). இவரது மனைவி ருக்சானாவுக்கு (45) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் அந்த ஆக்சிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதையடுத்து, அந்த இரண்டு மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
….
Source: Hindu
Read More >> உ.பி.யில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு