இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 கோடி மதிப்பினான போதைப் பொருள் பறிமுதல்: 3 பேர் கைது @ சென்னை
Uncategorized July 29, 2024,
சென்னை: தமிழகத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (சென்னை மண்டலம்) மண்டல இயக்குநர் பி.அரவிந்தன் தலைமையிலான போலீஸார் (என்சிபி) தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக என்சிபி பிரிவு போலீஸார் கடந்த 24-ம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
….
Source: Hindu
Read More >> இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 கோடி மதிப்பினான போதைப் பொருள் பறிமுதல்: 3 பேர் கைது @ சென்னை