சென்னை உளவுத் துறை காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை
Uncategorized June 18, 2024,
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் உளவுத் துறை காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கம் பிஆர்ஓ காவலர் குடியிருப்பில் 3-வது தளத்தில் வசிப்பவர் ஜான் ஆல்பர்ட் (33). இவர், டிஜிபி அலுவலகத்தில் உளவுத் துறை காவல் உதவி ஆய்வாளராக (எஸ்பிசிஐடி) பணி செய்து வந்தார். இவருக்கு ஜென்ஸி என்ற மனைவியும், 2 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை பணிக்கு செல்வதாக புறப்பட்டவர் பின்னர், பணிக்கு செல்லாமல் அவரது அறைக்குள் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை.
….
Source: Hindu
Read More >> சென்னை உளவுத் துறை காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை