உடுமலை: கூரை ஏறி பந்தை எடுக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு
Uncategorized May 25, 2024,
உடுமலை: உடுமலையில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய மாணவன் பந்தை எடுக்க கூரை மீது ஏறியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம், கண்ணு செட்டியார் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் குருராஜ். எலெக்ட்ரிசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரபு (12). அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலை மின்வாரியத்துக்கு சொந்தமான காலி இடத்தில் நண்பர்களுடன் பிரபு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்து அங்குள்ள ஷெட் ஒன்றின் கூரை மீது விழுந்து விட்டது. பந்தை எடுப்பதற்காக கூரை மீது ஏறிய பிரபு உயரழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
….
Source: Hindu
Read More >> உடுமலை: கூரை ஏறி பந்தை எடுக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு