ஆன்லைனில் பணத்தை இழந்த பெண்ணின் ரூ.15 லட்சத்தை மீட்டுத் தந்த கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸ்
Uncategorized May 11, 2024,
கிருஷ்ணகிரி: குறைந்த விலைக்கு கிரிப்டோ கரன்சி கிடைப்பதாக நம்பி ரூ.20 லட்சம் இழந்த பெண்ணுக்கு, ரூ.15 லட்சத்தை கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸார் மீட்டு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி சரண்யா. இவர் செல்போனில் டெலிகிராம் குரூப்பில் வந்த குறுந்தகவலை பார்த்து துபாயை சேர்ந்த கார்த்திக் என்பவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது குறைந்த விலைக்கு தன்னிடம் யுஎஸ்டிடி கிரிப்டோ கரன்சி உள்ளதாகவும், அதன் மூலம் உங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய சரண்யா, அவர் கூறிய 2 வங்கி கணக்குகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் 20 லட்சம் அனுப்பினார். அதன் பிறகு கார்த்திக்கை பல முறை சரண்யா தொடர்பு கொண்டு யுஎஸ்டிடி கிரிப்டோ கரன்சியை அனுப்புமாறு கேட்டார். ஆனால் அவர் கிரிப்டோ கரன்சியை அனுப்பவில்லை.
….
Source: Hindu
Read More >> ஆன்லைனில் பணத்தை இழந்த பெண்ணின் ரூ.15 லட்சத்தை மீட்டுத் தந்த கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸ்