ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது @ சென்னை

ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது @ சென்னை

Uncategorized

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1,19,306 மதிப்புள்ள 33 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் வெளியிட்ட தகவல்: சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 1) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (CSK vs PBSK) அணிகளுக்கிடையே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி இரவு ஆட்டமாக நடைபெற்றது. மேற்படி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

….

Source: Hindu

Read More >> ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது @ சென்னை

Search

Back to Top