சென்னை | போலீஸ் என கூறி வழிப்பறி செய்த வழக்கு: தலைமறைவாக இருந்த கொள்ளையன் கைது
Uncategorized February 15, 2025,
சென்னை: போலீஸ் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுக்காவைச் சேர்ந்தவர் சேது (25). இவர் கடந்த மாதம் 22-ம் தேதி காலை சென்னை பாரிமுனை, வடக்கு கடற்கரை ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு நின்றிருந்த 4 நபர்கள் சேதுவை வழிமறித்து நிறுத்தி, தாங்கள் போலீஸ் எனவும் பையை சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறி சோதனை செய்தனர். பின்னர், அவரிடமிருந்த ரூ.12 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அதை காவல் நிலையத்தில் வந்து பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
….
Source: Hindu
Read More >> சென்னை | போலீஸ் என கூறி வழிப்பறி செய்த வழக்கு: தலைமறைவாக இருந்த கொள்ளையன் கைது