ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த தமிழக அரசு: எத்தனை சதவீதம்?
Uncategorized October 22, 2024,

தமிழக அரசு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தற்போது போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து, தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதே போன்று அதே அளவு ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக அரசின் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
….
Source: Webduniya
Read More >> ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த தமிழக அரசு: எத்தனை சதவீதம்?