விழுப்புரம் நகராட்சி ஊழியர்கள் பிஎஃப் பணம் மோசடி: கைதான அதிமுக நிர்வாகியின் சொகுசு கார்கள் பறிமுதல்
Uncategorized October 9, 2024,
விழுப்புரம்: விழுப்புரம், சந்தானகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் ராஜமூர்த்தி மகன் வினித் (23). இவர் விழுப்புரம் நகராட்சியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தினக்கூலி அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணியாற்றியுள்ளார். அப்போது ஊழியர்களின் சேம நலநிதிக்காக (பிஎஃப்) ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையை கருவூலத்தில் செலுத்தி வந்துள்ளார். அப்போது கணினியில் பதிவு செய்யும் பணியை வினித் திறமையாக மேற்கொண்டதால் தொடர்ந்து கணினி பணியை மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நகராட்சி தொழிலாளி ஒருவர் தனது பிஎஃப் பணத்தை எடுக்கச் சென்றபோது, தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது குறித்து தகவலறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், கருவூல அதிகாரிகளும் தொழிலாளர்களின் சேமநலநிதி பங்களிப்பு செலுத்தப்படவில்லை என்று உள்ளாட்சி நிதி தணிக்கை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இதனிடையே, தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்ட வினித், நகராட்சி ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் சேமநல நிதியில் இருந்து சிறுகச் சிறுக ஊழியர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.8.01 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
….
Source: Hindu
Read More >> விழுப்புரம் நகராட்சி ஊழியர்கள் பிஎஃப் பணம் மோசடி: கைதான அதிமுக நிர்வாகியின் சொகுசு கார்கள் பறிமுதல்