திருப்பூர் வெடி விபத்தில் மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு – 2 பேர் கைது
Uncategorized October 10, 2024,
திருப்பூர்: திருப்பூரில் முறைகேடாக வீட்டில் நாட்டுவெடி தயாரித்தபோது, ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது பெண் குழந்தை இன்று (அக். 9) உயிரிழந்தார். இந்த வெடி விபத்து தொடர்பாக 2 பேர் இன்று (அக்.9) கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (40), தனது மைத்துனர் சரவணக்குமாருக்காக (35) வீட்டில் முறைகேடாக நாட்டுவெடி தயாரித்தபோது, ஏற்பட்ட வெடி விபத்தில் சுள்ளான் (எ) குமார் (23) என்பவர் உயிரிழந்தார். 9 மாத பெண் குழந்தை ஆலியாசிரின் மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் நேற்று உயிரிழந்தனர். இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விஜயா (52) என்பதும், தொழிலாளியாக நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
….
Source: Hindu
Read More >> திருப்பூர் வெடி விபத்தில் மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு – 2 பேர் கைது