உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வாகனம் மரத்தில் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு
Uncategorized September 25, 2024,
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே இன்று (புதன்கிழமை) அதிகாலை சாலையோர மரத்தில் சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று சாமி கும்பிடச் சென்றனர். திருச்செந்தூரில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் வேனில் திரும்பிய போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேட்டத்தூர் எனும் இடத்தில் கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
….
Source: Hindu
Read More >> உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வாகனம் மரத்தில் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு