மதுராந்தகம் மதுவிலக்கு எஸ்.ஐ. கையெழுத்து, முத்திரை துஷ்பிரயோகம்: 2 காவலர்கள் சஸ்பெண்ட்

மதுராந்தகம் மதுவிலக்கு எஸ்.ஐ. கையெழுத்து, முத்திரை துஷ்பிரயோகம்: 2 காவலர்கள் சஸ்பெண்ட்

Uncategorized

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள மதுராந்தகம் மதுவிலக்கு காவல் ஆய்வாளரின் கையெழுத்தை போலியாகவும் மற்றும் அலுவலக முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தி, சாராய வியாபாரியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கை விடுவிக்க முயன்ற, தலைமை காவலர் உள்பட இரண்டு போலீஸாரை மாவட்ட எஸ்பி.சாய்பிரணீத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பகுதியில் மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது. இதில், தற்போது மங்களப்பிரியா ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடப்பாக்கம் அருகே உள்ள சேம்புலிபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்ததாக குருசாமி என்பவரை மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட குருசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் சுமார் 6.30 லட்சம் இருந்துள்ளது.

….

Source: Hindu

Read More >> மதுராந்தகம் மதுவிலக்கு எஸ்.ஐ. கையெழுத்து, முத்திரை துஷ்பிரயோகம்: 2 காவலர்கள் சஸ்பெண்ட்

Search

Back to Top