6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் – யார் இந்த சீசிங் ராஜா?
Uncategorized September 23, 2024,
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஞாயிறன்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். குரோம்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனங்களை சீசிங் செய்யும் வேலை செய்து வந்ததால் இவருக்கு சீசிங் ராஜா என்ற அடைமொழி வந்துள்ளது. இவர் மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஞாயிறன்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா போலீஸாரால் என்கவுன்ட்டரில் இன்று (செப்.23) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மட்டும் அல்லாமல், தாம்பரம் மாநகரம் சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்ற வழக்கு தொடர்பாகவும் பிரபல ரவுடியான சீசிங் ராஜாவை போலீஸார் தேடி வந்தனர். தாம்பரம் காவல் ஆணையர், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என சீசிங் ராஜாவின் புகைப்படத்துடன் நோட்டீஸ் ஓட்டி தேடி வந்தார்.
….
Source: Hindu
Read More >> 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் – யார் இந்த சீசிங் ராஜா?