ஆயுள் கைதி சித்ரவதை விவகாரம்: வேலூர் சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Uncategorized September 12, 2024,
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மீதான திருட்டு புகாரில் தனிச்சிறையில் அடைத்து துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த சிவக்குமார் என்பவர் வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமியின் வீட்டில் கடந்த சில மாதங்களாக முறைகேடாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். அப்போது, டிஐஜி வீட்டில் ரூ.4.25 லட்சம் பணத்தை சிவக்குமார் திருடிய குற்றச்சாட்டால் அவரை தனிச்சிறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
….
Source: Hindu
Read More >> ஆயுள் கைதி சித்ரவதை விவகாரம்: வேலூர் சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்