திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸ் குவிப்பு
Uncategorized September 2, 2024,
திருத்தணி: ஆர்.கே.பேட்டை அருகே செல்லாத்தூரில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க 30-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள செல்லாத்தூர் பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவைச் சேர்ந்த சந்துரு (19), சதீஷ் ( 26) ஆகிய இருவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில், அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றனர். அப்போது, கடையின் அருகில் மோட்டார் சைக்கிளை சந்துரு நிறுத்த முயன்ற போது, அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு பிரிவைச் சேர்ந்த குப்பன் (40), மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.
….
Source: Hindu
Read More >> திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸ் குவிப்பு