தனியார் கல்லூரி பெண்கள் விடுதியில் கஞ்சா.. 500 போலீசார் அதிரடி சோதனை..!
Uncategorized August 31, 2024,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பழக்கம் இருப்பதாக கூறப்படுவதை அடுத்து திடீரென 500க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனைகள் இறங்கி இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 500 மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை செய்ட்து வருகின்றனர்.
இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும், அவர்களிடம் கிடைக்கும் தகவலுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva
….
Source: Webduniya
Read More >> தனியார் கல்லூரி பெண்கள் விடுதியில் கஞ்சா.. 500 போலீசார் அதிரடி சோதனை..!