மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனை தொடர்ந்து மேலும் 2 இயக்குநர்கள் கைது!
Uncategorized August 14, 2024,
சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைதான நிலையில், நிதி நிறுவனத்தின் மேலும் இரண்டு இயக்குநர்கள் இன்று (ஆக.14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்புத் தொகை உள்ள உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் இதில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக இந்த நிதி நிறுவனம் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனை தொடர்ந்து மேலும் 2 இயக்குநர்கள் கைது!