நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய 9-ம் வகுப்பு மாணவர்!
Uncategorized August 3, 2024,
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே விஜயநாராயணத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவரை 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் உட்கோட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இந்திய கடற்படை வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ – மாணவியர் கல்வி பயில்கிறார்கள். அருகிலுள்ள மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த 9-வது வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது சாப்பாட்டுப் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்து நாங்குநேரியை சேர்ந்த சக மாணவர் மீது சிந்தியதாகவும், அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் முன்விரோதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
….
Source: Hindu
Read More >> நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய 9-ம் வகுப்பு மாணவர்!