ராமேசுவரம் கோயிலில் வட மாநில பக்தர் மீது கோயில் ஊழியர்கள் தாக்குதல்: போலீஸ் விசாரணை
Uncategorized July 16, 2024,
ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த வட மாநில பக்தர் மீது கோயில் ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில் குமார் ஓஜா (29). இவர் தற்போது திருப்பூரில் வசித்து வருகிறார். நிகில் குமார் அவரது சகோதரி நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் சாமி தரிசனம் செய்ய சுவாமி சன்னதியில் வரிசையில் செல்லும் போது அங்கு பணியில் இருந்த கோயில் காவலாளிகள் பெண்களையும் குழந்தைகளையும் விரைவாகச் செல்ல வேண்டும் என விரட்டி உள்ளனர்.
….
Source: Hindu
Read More >> ராமேசுவரம் கோயிலில் வட மாநில பக்தர் மீது கோயில் ஊழியர்கள் தாக்குதல்: போலீஸ் விசாரணை