தவெக நிர்வாகி கொலையில் தொடர்புடைய ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ் @ லால்குடி

தவெக நிர்வாகி கொலையில் தொடர்புடைய ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ் @ லால்குடி

Uncategorized

திருச்சி: லால்குடியில் முன்விரோதம் காரணமாக தமிழக வெற்றி கழக நிர்வாகியை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீஸார் வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன் என்கிற நவீன்குமார் (29). தமிழக வெற்றி கழக நிர்வாகியான இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு அனுசியா என்ற மனைவியும், பிரணவ் கிருஷ்ணன் (6) என்ற மகனும் உள்ளனர். அதேபோல ஆதிகுடி கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா என்கிற கலைப்புலி ராஜா (27). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. திருவெறும்பூர் காட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடி கும்பலில் நவீன்குமார், ராஜா ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.

….

Source: Hindu

Read More >> தவெக நிர்வாகி கொலையில் தொடர்புடைய ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ் @ லால்குடி

Search

Back to Top