ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இழந்த கணவர் – சின்னமனூரில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை
Uncategorized July 5, 2024,
சின்னமனூர்: சின்னமனூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் மணிமாலா (36). மாற்றுத் திறனாளியான இவர் சின்னமனூர் அரசு மருத்துவ மனையில் தோல் நோய் சிகிச்சைப் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் உள்ளூரில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு தருண் (11) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், மணிகண்டன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் ரூ.50 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதியருக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கடனை சில மாதங்களுக்கு முன்பு அடைத்துள்ளனர்.
….
Source: Hindu
Read More >> ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இழந்த கணவர் – சின்னமனூரில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை