டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

Uncategorized

Modi  Advani

கடந்த சில நாட்களுக்கு முன்ன டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் துணை பிரதமர் எல்கே அத்வானி அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

 

முன்னாள் துணை பிரதமர் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் எல் கே அத்வானி தற்போது முழு ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நேற்று நள்ளிரவு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

 

அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும் எல் கே அத்வானி அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

டந்த வாரம் தான் அத்வானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edited by Mahendran

 

….

Source: Webduniya

Read More >> டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

Search

Back to Top