ராமேசுவரத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீச்சு: 4 சுற்றுலா வேன்கள் சேதம்
Uncategorized June 30, 2024,
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியதில் 4 சுற்றுலா வேன்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே சுற்றுலா வேன் வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின், வேன் வாடகை மையம் இயங்கி வருகிறது. இப்பகுதியில் நேற்று (ஜூன் 28) இரவில் வெளியூரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உள்ளூர் வேன் ஓட்டுநர்கள், மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டு விரட்டி அனுப்பினர். இதில் மோதல் ஏற்பட்டு உச்சிப்புளியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கார்த்திக் (27) என்பவருக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
….
Source: Hindu
Read More >> ராமேசுவரத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீச்சு: 4 சுற்றுலா வேன்கள் சேதம்