ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மயிலாடுதுறை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
Uncategorized May 29, 2024,
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில்,ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை பெரியத்தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் தினசீலன்(31). இவர், சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தினசீலன், புதன்கிழமை காலை வழக்கம் போல் எழுந்து சில பணிகளைச் செய்து விட்டு மீண்டும் தனது அறைக்குச் சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால், அங்கு சென்று பார்த்தபோது, தினசீலன், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
….
Source: Hindu
Read More >> ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மயிலாடுதுறை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை