காரைக்குடி: வியாபாரியிடம் 75 பவுன் நகை, 7 கிலோ வெள்ளி திருடிய முகமூடி கொள்ளையர்கள்
Uncategorized May 21, 2024,
காரைக்குடி: காரைக்குடியில் நகை வியாபாரியிடம் 75 பவுன் நகைகள், 7 கிலோ வெள்ளியை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுந்தரம் செட்டியார் தெருவைச் சேர்ந்த நகை வியாபாரி சரவணன் (41). இவர் நேற்றிரவு சென்னையில் 75 பவுன் நகைகள், 7 கிலோ வெள்ளி கட்டி வாங்கி கொண்டு காரைக்குடிக்கு பேருந்தில் வந்தார். இன்று (மே.21) காலை பேருந்தில் இருந்து இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் முகமூடி, ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கத்தியை காட்டி மிரட்டி, தங்க நகைகள், வெள்ளிக் கட்டிகளை பறித்துச் சென்றனர்.
….
Source: Hindu
Read More >> காரைக்குடி: வியாபாரியிடம் 75 பவுன் நகை, 7 கிலோ வெள்ளி திருடிய முகமூடி கொள்ளையர்கள்