முத்தாபுதுப்பேட்டையில் துப்பாக்கி முனையில் கொள்ளை வழக்கு: கொள்ளையருக்கு உதவியதாக 2 பேர் கைது
Uncategorized April 30, 2024,
ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடிஅருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர், தன் வீட்டின் கீழ் தளத்தில் நடத்தி வரும் நகை மற்றும் அடகு கடையில் கடந்த 15-ம் தேதி பகலில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.
அக்கும்பல், கடையின் இரும்பு கதவை மூடி, இரு துப்பாக்கிகளின் முனையில் இந்தி மொழியில் பேசி பிரகாஷை மிரட்டியது. தொடர்ந்து, அக்கும்பல், பிரகாஷின் வாயை டேப்பால் ஒட்டிவிட்டு, கைகளை கயிற்றால் கட்டி விட்டு, கடையின் லாக்கரில் இருந்த சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான புதிய தங்க நகைகள், அடகு வைக்கப்பட்ட தங்கநகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம்ஆகியவற்றை கொள்ளையடித்தது.
….
Source: Hindu
Read More >> முத்தாபுதுப்பேட்டையில் துப்பாக்கி முனையில் கொள்ளை வழக்கு: கொள்ளையருக்கு உதவியதாக 2 பேர் கைது