காட்டு மாடு வேட்டையாடிய வழக்கில் அதிமுக மாநில நிர்வாகி தலைமறைவு @ கூடலூர்
Uncategorized April 24, 2024,
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்தநடுவட்டம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், சருகு மான் மற்றும் காட்டு மாடு வேட்டையாடப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து, வேட்டைக்குப் பயன்படுத்திய 2 நாட்டுத்துப்பாக்கிகள், 11 தோட்டாக்கள், கோடாரி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்த வனத் துறையினர், இதுகுறித்து 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 3 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணித் தலைவர் சஜீவன் உட்பட 3 பேரைத் தேடி வருகின்றனர்.
….
Source: Hindu
Read More >> காட்டு மாடு வேட்டையாடிய வழக்கில் அதிமுக மாநில நிர்வாகி தலைமறைவு @ கூடலூர்