கொரோனா மரணங்களை மறைக்காதே என்றால் அரசியலா ? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

கொரோனா மரணங்களை மறைக்காதே என்றால் அரசியலா ? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

tami nadu

கொரோனா மரணங்களை மறைக்காதே என்று சொன்னால் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் “கடந்த மார்ச் 1 முதல் ஜூன் 10ஆம் தேதி வரை வேறு காரணங்களால் மரணித்தவர்கள் என்று மருத்துவர்களால் சொல்லப்பட்ட 444 மரணங்கள் கொரோனா நோய்தொற்று மரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த 444 மரணங்கள் இதுவரை கொரோனாவில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் “கொரோனா மரணங்களை மறைக்காதே என்றால் அய்யோ அரசியல் செய்கிறார்கள் என்ற 420கள் மார்ச் முதல் விடுபட்ட 444 கொரோனா மரணங்களை இன்று சொல்கின்றனர். இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தது யார்? தொற்றேதும் பரவியதா? நீங்கள் அடிக்கடி மாற்றும் எஜமானர்கள் போல மனித உயிரொன்றும் துச்சமில்லை அடிமைகளே” என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> கொரோனா மரணங்களை மறைக்காதே என்றால் அரசியலா ? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Search

Back to Top